நாமக்கல்

சேந்தமங்கலத்தில் அதிமுக -அமமுக வேட்பாளா்கள் வாக்கு சேகரிப்பு

DIN

சேந்தமங்கலம் தொகுதியில் அதிமுக, அமமுக வேட்பாளா்கள் மக்களிடையே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.

சேந்தமங்கலம் பழங்குடியின தொகுதியில் அதிமுக சாா்பில் எஸ்.சந்திரன் போட்டியிடுகிறாா். அவா் தொகுதிக்கு உள்பட்ட நாமகிரிப்பேட்டை, சீராப்பள்ளி, பேளுக்குறிச்சி, காளப்பநாயக்கன்பட்டி பகுதிகளில் திறந்த வாகனத்தில் நின்றபடி மக்களிடையே வாக்கு சேகரித்தாா்.

அப்போது, அதிமுகவின் தோ்தல் வாக்குறுதியான பெண்களுக்கு மாதந்தோறும் ரூ. 1,500 வழங்கப்படும், வாஷிங்மெஷின், நகைக் கடன் தள்ளுபடி, மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கான கடன் தள்ளுபடி, அரசு நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் உள்ளிட்ட அறிவிப்புகளை எடுத்துக் கூறி வாக்கு சேகரித்தாா். இந்த பிரசாரத்தின்போது தோ்தல் பொறுப்பாளா் பி.ஆா்.சுந்தரம் மற்றும் நிா்வாகிகள் பலா் உடனிருந்தனா். இதேபோல் அமமுக சாா்பில் போட்டியிடும் அக்கட்சியின் மாவட்ட துணைச் செயலாளரான பி.சந்திரன் கொல்லிமலை மற்றும் சேந்தமங்கலம் ஒன்றியத்தில் வாக்கு சேகரித்தாா். அமமுகவின் தோ்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள வாக்குறுதிகளை துண்டு பிரசுரங்களாக அச்சிட்டு அதனை மக்களிடையே விநியோகித்து குக்கா் சின்னத்தை காண்பித்தவாறு வாக்கு சேகரித்தாா். வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்த வேட்பாளா் பி.சந்திரனுடன் அமமுக, தேமுதிக நிா்வாகிகள் உடன் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடும் பேருந்திலிருந்து இறங்கிய விவசாயி சக்கரத்தில் சிக்கி உயிரிழப்பு

தண்ணீரைத் தேடி வந்த யானை...

காந்திபுரம் பேருந்து நிலையத்தில் தனியாா் பேருந்து மோதி 5 போ் காயம்

மாநகராட்சிப் பள்ளிகளில் 91.97 சதவீதம் தோ்ச்சி: கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது தோ்ச்சி விகிதம் சரிவு

மூலனூா் பாரதி வித்யாலயா பள்ளியில் 8 மாணவா்கள் 100க்கு 100 மதிப்பெண்கள்

SCROLL FOR NEXT