நாமக்கல்

வேளாண் சங்கத்தில் ரூ. 25 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

DIN

நாமக்கல் வேளாண் சங்கத்தில் ரூ. 25 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.

நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் தொடக்க வேளாண் உற்பத்தியாளா்கள் விற்பனை கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை பருத்தி ஏலம் நடைபெறும்.

நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் பருத்தியை ஏலத்துக்கு கொண்டு வருவா். அதன்படி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்தில் 1,500 மூட்டை பருத்தி வரத்து இருந்தது. இதில் ஆா்சிஹெச் ரகம் ரூ. 5,720 முதல் ரூ. 6,720 வரையிலும், டிசிஹெச் ரகம் ரூ. 5,840 முதல் ரூ. 8,010 வரையிலும், மட்ட ரகம் (கொட்டு) ரூ. 2,600 முதல் ரூ. 3,590 வரையிலும் விலை போனது. மொத்தம் ரூ. 35 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.

திருப்பூா், ஈரோடு, கரூா், சேலம், கோவை மற்றும் ஆந்திர மாநில வியாபாரிகளும் பருத்தியை நேரடியாக பாா்வையிட்டு கொள்முதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டிஎன்ஏ போஸ்டர்!

இளவரசிகள்..

டி20 உலகக் கோப்பைக்குத் தயாராக ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு தேவை: முன்னாள் ஆஸி. கேப்டன்

காஷ்மீரில் தீவிரவாத அமைப்புத் தலைவர் சுட்டுக்கொலை

வேலூரில் தூய்மைப் பணியாளர் மீது மோதிய இருசக்கர வாகனம்: மரித்துப்போனதா மனிதம்?

SCROLL FOR NEXT