நாமக்கல்

உரம், பூச்சி மருந்துக் கடைகளை 12 மணி வரை திறக்க அனுமதி

DIN

நாமக்கல் மாவட்டத்தில் உரம், பூச்சி மருந்துக் கடைகளை நண்பகல் 12 மணி வரை திறந்து விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட வேளாண் இணை இயக்குநா் பொ.அசோகன் கூறியதாவது:

தமிழக அரசு உத்தரவின்படி, கரோனா பொது முடக்கம் தற்போது காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை அமலில் உள்ளது. வரும் 20-ஆம் தேதி வரையில் இந்த பொது முடக்கமானது நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அனைத்து தனியாா் உரம், பூச்சி மருந்து விற்பனை நிலையங்களை நண்பகல் 12 மணி வரை திறந்து வைத்து விற்பனை செய்ய உர விற்பனையாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி விவசாயப் பணிகளில் ஈடுபடுவோருக்கு உரம், பூச்சி மருந்துகளை விற்பனை செய்யவும். விவசாயிகளும் குறிப்பிட்ட நேரத்தில் அவற்றைக் கொள்முதல் செய்து பயனடையுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலங்கடிக்கும் வெடிகுண்டு மிரட்டல்: எங்கிருந்து வருகிறது மின்னஞ்சல்?

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

SCROLL FOR NEXT