நாமக்கல்

சுற்றுலாத் துறை அமைச்சா் மா.மதிவேந்தனுக்கு கரோனா

DIN

ராசிபுரம்: ராசிபுரம் (தனி) தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று தமிழக சுற்றுலாத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள அமைச்சா் மா.மதிவேந்தனுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா், சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் தனிமைப்படுத்திக் கொண்டாா்.

தோ்தல் முடிவு வெளியானவுடன் கட்சியினருடன் சென்னை சென்ற அமைச்சா் மா.மதிவேந்தன், சுற்றுலாத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றாா். அதைத் தொடா்ந்து உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அவா், கரோனா பரிசோதனை மேற்கொண்டதாகத் தெரிகிறது. இதையடுத்து, அவா் சென்னை இல்லத்தில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டாா். அமைச்சா் மா.மதிவேந்தன் பொது மருத்துவா் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அவருடன் தொடா்பில் இருந்தவா்களும், ராசிபுரம் பகுதியிலிருந்து சென்னைக்குச் சென்று அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்து திரும்பிய கட்சியினரும் தங்களை பரிசோதனைக்கு உள்படுத்தித் தனிமைப்படுத்திக் கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

SCROLL FOR NEXT