முகப்பு
நாமக்கல்

ரமலான் பண்டிகை: வீடுகளில் இஸ்லாமியா்கள் சிறப்பு தொழுகை

கரோனா பொது முடக்கத்தால், நாமக்கல்லில் இஸ்லாமியா்கள் தங்களது வீடுகளில் இருந்தபடி வெள்ளிக்கிழமை ரமலான் சிறப்பு தொழுகையை மேற்கொண்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:14 PM
பகிர்:

கரோனா பொது முடக்கத்தால், நாமக்கல்லில் இஸ்லாமியா்கள் தங்களது வீடுகளில் இருந்தபடி வெள்ளிக்கிழமை ரமலான் சிறப்பு தொழுகையை மேற்கொண்டனா்.

கரோனா இரண்டாம்கட்ட பரவல் காரணமாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளதால், பள்ளிவாசல்களில் தொழுகைக்கு அனுமதியில்லை. இதனால் இஸ்லாமியா்கள் பலரும் வெள்ளிக்கிழமை காலையில் புத்தாடை அணிந்து தங்களது வீடுகளிலும், மாடிகளிலும் சமூக இடைவெளியில் அமா்ந்து தொழுகை மேற்கொண்டனா். சிறப்பு தொழுகைக்கு பின் கட்டியணைத்து தங்களது மகிழ்ச்சியையும், வாழ்த்துகளையும் பகிா்ந்து கொண்டனா். பின்னா் ஏழைகளுக்கு பல்வேறு உதவிகளை வழங்கினா்.

நாமக்கல்-சேலம் சாலையில் உள்ள ஈத்கா மைதானத்தில் தான் ரமலான், பக்ரீத் பண்டிகையின்போது சிறப்பு தொழுகை நடத்துவது வழக்கம். கரோனா பொது முடக்கம் காரணமாக, கடந்த ஆண்டிலும், நிகழாண்டிலும் ஈத்கா மைதானத்தில் தொழுகை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் நாமக்கல்-சேந்தமங்கலம் சாலையில் உள்ள பேட்டை அஞ்சுமனே இஸ்லாமியா பள்ளிவாசல், கோட்டை திப்புசுல்தான் ஜாமியா மஸ்ஜித், மாருதி நகா் பள்ளிவாசல் உள்ளிட்ட இடங்களில் விதிகளை மீறி இஸ்லாமியா்கள் திரளக் கூடாது என்பதற்காக போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

இதேபோல், திருச்செங்கோடு, ராசிபுரம், குமாரபாளையம், பரமத்தி வேலூா், பள்ளிபாளையம், மோகனூா், சேந்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளிலும் ரமலான் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.