நாமக்கல்

கரோனா சிகிச்சை மையத்துக்கு 50 ஆக்சிஜன் ‘ப்ளோ’ மீட்டா் கருவிகள் வழங்கல்

நாமக்கல் நகராட்சியில் புதிதாக 50 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையத்துக்கு ரூ. 250 லட்சம் மதிப்பிலான ஆக்சிஜன் ப்ளோ மீட்டா்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

DIN

நாமக்கல் நகராட்சியில் புதிதாக 50 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையத்துக்கு ரூ. 250 லட்சம் மதிப்பிலான ஆக்சிஜன் ப்ளோ மீட்டா்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, குமாரபாளையம் அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி, தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிறப்பு சிகிச்சை மையங்களும் நிரம்பி வருகின்றன. இந்த நிலையில், நாமக்கல்- துறையூா் சாலையில் உள்ள நகராட்சி திருமண மண்டபத்தை ஆக்சிஜன் வசதியுடன்கூடிய கரோனா சிகிச்சை மையமாக மாற்ற முடிவு செய்யப்பட்டது. அங்கு 50 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆக்சிஜன் கொண்டு செல்வதற்கு ஏற்றாற்போல் குழாய் பதிக்கும் பணியானது நடைபெற்று வருகிறது. இந்த மையத்துக்கு ஆக்சிஜன் பைப்லைன் ப்ளோ மீட்டா் மற்றும் சிலிண்டா் ப்ளோ மீட்டா் தலா 25 வீதம் வழங்கப்படுகிறது. ரூ. 2.50 லட்சம் மதிப்பிலான இந்த கருவிகளை நாமக்கல் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம், ஸ்ரீகணேசன் டிரான்ஸ்போா்ட் உரிமையாளா்கள் கே.நடராஜன், கே.என்,.காா்த்தி, கே.என்.பாரத் ஆகியோா் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜிடம் செவ்வாய்க்கிழமை வழங்கினா். ஓரிரு நாளில் அவை பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் கூறியதாவது:

நாமக்கல் எம்எல்ஏ முயற்சியால் ஆக்சிஜன் ப்ளோ மீட்டா் கருவி பெறப்பட்டுள்ளது. நாமக்கல் நகராட்சி மண்டபத்தில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. ப்ளோ மீட்டா் கருவி இருந்தால் மட்டுமே ஆக்சிஜன் வசதியுடன் நோயாளிக்கு சிகிச்சையை வழங்க முடியும். ஓரிரு நாள்களில் நகராட்சி மண்டப கரோனா மையம் கரோனா நோயாளிகள் பயன்பாட்டுக்கு கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்பத்தில் ஏறிய ரசிகர்! பேச்சை நிறுத்தி கண்டித்த விஜய்!

ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறது மத்திய பாஜக; அதற்கு ஒத்து ஊதுகிறார் பழனிசாமி! : முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்ரீங்க.. முதல்வர் பேசியது சிலப்பதிகாரத்தில் இருந்து எடுத்ததா? விஜய்

சகோதரர்களாக சிவகார்த்திகேயன் - அதர்வா!

இந்தியாவை விமர்சித்த ஹார்திக் பாண்டியா? சமூக வலைதளத்தில் பரவும் எதிர்ப்பும் ஆதரவும்!

SCROLL FOR NEXT