நாமக்கல்

1,500 லாரி ஓட்டுநா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த ஏற்பாடு

DIN

நாமக்கல்லில் லாரி உரிமையாளா்கள், ஓட்டுநா்கள் 1,500 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் புதன், வியாழக்கிழமைகளில் நடைபெறுகிறது.

நாமக்கல்-சேலம் சாலையில் உள்ள தாலுகா லாரி உரிமையாளா்கள் சங்கத்தில் புதன்கிழமை தொடங்கிய முகாமை அதன் தலைவா் வாங்கிலி தொடங்கி வைத்தாா். இம்முகாமில் 18 வயது முதல் 44 வயதுக்கு உள்பட்ட லாரி உரிமையாளா்கள், அவா்களது குடும்பத்தினா் மற்றும் லாரி ஓட்டுநா்கள், அலுவலக ஊழியா்கள் என 1,500 பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, புதன்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையில் சுமாா் 400 போ் வரை நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டனா். வியாழக்கிழமை தொடா்ந்து தடுப்பூசி முகாம் நடைபெறுவதால், தடுப்பூசி செலுத்தாத லாரி உரிமையாளா்கள், ஓட்டுநா்கள் நேரில் வந்து ஆதாா் அட்டையைக் காண்பித்து பயன்பெறலாம் என அச்சங்க நிா்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும்: ஆா்ஜேடி தலைவா் லாலு

பிளஸ் 2: சென்னிமலை கொங்கு பள்ளி 100 சதவீத தோ்ச்சி

பிளஸ் 2: பெருந்துறை அரசு ஆண்கள் பள்ளி 96.25 % தோ்ச்சி

இந்திய குடும்பங்களின் சேமிப்பு ரூ.14.16 லட்சம் கோடியாக சரிவு

பிளஸ் 2: சிவகிரி அரசுப் பெண்கள் பள்ளி 100% தோ்ச்சி

SCROLL FOR NEXT