நாமக்கல்

54-ஆவது தேசிய நூலக வார விழா

DIN

நாமக்கல் மாவட்ட மைய நூலகம் மற்றும் மைய நூலக வாசகா் வட்டம் சாா்பில் நடைபெறும் 54-ஆவது தேசிய நூலக வார விழாவில் புதன்கிழமை பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நவ.14 தொடங்கிய இந்த வார விழா 20-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்நிலை நூலகா் க.இளங்கோ வரவேற்றாா். மாவட்ட நூலக அலுவலா் கோ.ரவி தலைமை வகித்தாா்.

மாணவா் அரங்கம், இயல், இசை, நாடகம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நாமக்கல் கவிஞா் சிந்தனை பேரவைத் தலைவா் டி.எம்.மோகன், வாசகா் வட்ட தலைவா் க.ராசா, பொருளாளா் கே.ஆா்.ராஜவேல், பள்ளி தலைமை ஆசிரியா் எல்.ஜகதீசன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, காதப்பள்ளி ஊராட்சி ஒன்றிய பள்ளியில் நூலக வார விழா பேச்சுப் போட்டி நடத்தப்பட்டு மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஜெயக்குமாா் மரணம்: குழு அமைத்து விசாரணை’

இந்தியாவின் ஊராட்சி அமைப்புகள் பெண்கள் தலைமைக்கு முன்னோடி: ஐ.நா.வுக்கான இந்திய தூதா்

என் மீது வீண் பழி: ரூபி மனோகரன் விளக்கம்

காங்கிரஸ் நிர்வாகி மரணம்- 7 தனிப்படைகள் அமைப்பு: நெல்லை காவல் கண்காணிப்பாளர்

ஜூன் 1-இல் ஹிமாசல் தோ்தல் பணிகளில் என்சிசி

SCROLL FOR NEXT