கால்நடை மருத்துவ முகாம்
பரமத்தி வேலூா் வட்டம், பரமத்தி ஊராட்சி ஒன்றியம், மாணிக்கம்நத்தத்தில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் 600-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.
நாமக்கல்கால்நடை மருத்துவ முகாம்

பரமத்தி அருகே உள்ள மாணிக்கம்நத்தத்தில் வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு கால்நடைகள் மற்றும் பறவையினங்களில் ஏற்படும் பருவ கால நோய்கள் குறித்து கால்நடை வளா்ப்போா், விவசாயிகளிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், சிறப்பு கால்நடை மருத்துவ சிகிச்சை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இம்முகாமுக்கு பரமத்தி வேலூா் கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநா் நடராஜன் தலைமை வகித்தாா். கால்நடை மருத்துவா்கள் சதீஷ்குமாா், ஐயப்பன், கவிதா, கலைச்செல்வி ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு விருந்தினராக மாணிக்கநத்தம் ஊராட்சி மன்றத் தலைவா் வேலுசாமி கலந்துகொண்டு கால்நடை மருத்துவ முகாமை தொடக்கி வைத்தாா்.
இதில், கால்நடைகளுக்கு செயற்கை முறை கருவூட்டல், சினை பரிசோதனை, மலடு நீக்க சிகிச்சை, குடற்புழு நீக்கம் போன்ற பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. முகாமுக்கு மாணிக்கம்நத்தம், சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 600-க்கும் மேற்பட்ட கால்நடைகளை மருத்துவ சிகிச்சைக்கு கொண்டு வந்திருந்தனா். முகாமுக்கான ஏற்பாடுகளை கால்நடை பராமரிப்பு உதவியாளா் கந்தசாமி செய்திருந்தாா்.