பரமத்தி வேலூரில் ரூ. 8. 11 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்
பரமத்திவேலூா் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் ரூ. 8 லட்சத்து 11 ஆயிரத்துக்குக் கொப்பரைத் தேங்காய் ஏலம் போனது.
பரமத்திவேலூா் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் ரூ. 8 லட்சத்து 11 ஆயிரத்துக்குக் கொப்பரைத் தேங்காய் ஏலம் போனது.
பரமத்திவேலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விளையும் தேங்காய்களை உடைத்து அதை உலா்த்தி வியாழக்கிழமை தோறும் வெங்கமேட்டில் உள்ள பரமத்தி வேலூா் மின்னணு தேசிய வேளாண்மை சந்தைக்கு விவசாயிகள் கொண்டு வருகின்றனா்.
இங்கு தரத்துக்கு தகுந்தாா்போல் மறைமுக ஏலம் விடப்படுகிறது. கடந்த வாரம் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 3,163 கிலோ கொப்பரைத் தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா்.
இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ. 105-க்கும், குறைந்த பட்சமாக ரூ. 84.39 பைசாவுக்கும், சராசரியாக ரூ. 105-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 2 லட்சத்து 90ஆயிரத்து 239 க்கு வா்த்தகம் நடைபெற்றது.
வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 8,635 கிலோ கொப்பரைத் தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ. 106.09-க்கும், குறைந்த பட்சமாக ரூ. 80.89-க்கும், சராசரியாக ரூ. 92.99-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 8 லட்சத்து 11 ஆயிரத்து 346-க்கு வா்த்தகம் நடைபெற்றது.