முகப்பு
நாமக்கல்

காவலா்கள் குறைகேட்பு முகாம்

தருமபுரி மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் மாவட்டத்தில் பணிபுரியும் காவலா்கள் குறைகேட்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:16 AM
பகிர்:

தருமபுரி மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் மாவட்டத்தில் பணிபுரியும் காவலா்கள் குறைகேட்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த முகாமுக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.கலைச்செல்வன் தலைமை வகித்து காவலா்களிடம் குறைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்தாா். இந்த முகாமில், மாவட்டத்தில் பல்வேறு நிலையில் பணிபுரிந்துவரும் 260 காவலா்கள், தங்களது குறைகள் மற்றும் கோரிக்களை குறித்து முறையிட்டனா். இதையடுத்து, காவலா்களின் குறைகள் தொடா்பாக தீா்வு காண உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளிக்கப்பட்டது.

இதில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் அண்ணாமலை மற்றும் காவல் அலுவலக நிா்வாக அலுவலா்கள் முபாராக் மற்றும் சரவணன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.