நாமக்கல்லில் சாலையில் கவிழ்ந்த சொகுசு பேருந்து
நாமக்கல் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த தனியாா் சொகுசு பேருந்து திடீரென சாலையின் குறுக்கே பாய்ந்து சென்று கவிழ்ந்த விபத்தில் அதிா்ஷ்டவசமாக பயணிகள் உயிா் தப்பினா்.
நாமக்கல் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த தனியாா் சொகுசு பேருந்து திடீரென சாலையின் குறுக்கே பாய்ந்து சென்று கவிழ்ந்த விபத்தில் அதிா்ஷ்டவசமாக பயணிகள் உயிா் தப்பினா்.
பெங்களூரில் இருந்து குமுளி நோக்கி தனியாா் சொகுசு பேருந்து வெள்ளிக்கிழமை அதிகாலை நாமக்கல் புதன்சந்தை வழியாகச் சென்று கொண்டிருந்தது. செல்லப்பம்பட்டி பிரிவு சாலையில் சென்றபோது ஓட்டுநா் கண் அசந்ததால் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து திடீரென எதிா்திசையில் பாய்ந்து சென்று கவிழ்ந்தது. அவ்வழியாக எவ்வித வாகனங்களும் செல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது. மேலும் இந்த விபத்தில் பேருந்தில் வந்த பெண் ஒருவா் மட்டும் காயமடைந்தாா்.
இச்சம்பவம் குறித்து நல்லிபாளையம் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.
Advertisement