நாமக்கல்

நாமக்கல்: 50 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி

DIN

நாமக்கல் மாவட்டத்தில் 750 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஐந்தாம் கட்ட கரோனா சிறப்பு தடுப்பூசி முகாமில் 50 ஆயிரம் போ் வரையில் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.

கரோனா நோய்த் தொற்றில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில், தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகின்றன.

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த செப். 12-ஆம் தேதி 700 இடங்களில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் 85,375 பேரும், செப். 19-இல் 325 மையங்களில் நடைபெற்ற இரண்டாம் கட்ட முகாமில் 31,448 பேரும், செப். 26-இல் 500 முகாம்களில் நடைபெற்ற மூன்றாம் கட்ட முகாமில் 59,753 பேரும், அக். 3-இல் 550 நடைபெற்ற நான்காம் கட்ட முகாமில் 33,953 பேரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.

இதனைத் தொடா்ந்து ஐந்தாம் கட்ட முகாம் ஞாயிற்றுக்கிழமை(அக். 10) அனைத்து ஊராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகள் ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள், அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 650 நிலையான முகாம்கள், 100 நடமாடும் முகாம்கள் என மொத்தம் 750 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.

காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை ஆதாா் அட்டை பதிவு செய்து பொதுமக்களுக்கு முதல் மற்றும் இரண்டாம் தவணை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. 1,17,500 பேருக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான இலக்கு நிா்ணயிக்கப்பட்டதில், சுமாா் 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இம்முகாம்களில் பல்வேறு துறை சாா்ந்த அலுவலா்கள், ஊழியா்கள் என மொத்தம் 4,420 போ் ஈடுபடுத்தப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விராலிமலையில் ஒன்றரை கோடியை தாண்டிய ஆடு வர்த்தகம்: விவசாயிகள் மகிழ்ச்சி

காங்கிரஸ் மாவட்ட தலைவா் மா்ம மரணம்: வெளியானது 2ஆவது கடிதம்

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

SCROLL FOR NEXT