முகப்பு
நாமக்கல்

பரமத்தி வேலூரில் வெற்றிலை விலை சரிவு

 பரமத்தி வேலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் வெற்றிலை விலை சரிவடைந்துள்ளது.

நாமக்கல்

பரமத்தி வேலூரில் வெற்றிலை விலை சரிவு

 பரமத்தி வேலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் வெற்றிலை விலை சரிவடைந்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:25 AM
பகிர்:

 பரமத்தி வேலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் வெற்றிலை விலை சரிவடைந்துள்ளது.

பரமத்தி வேலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளான பாண்டமங்கலம், பொத்தனூா், வேலூா், அனிச்சம்பாளையம், குப்புச்சிப்பாளையம், நன்செய் இடையாறு, பாலப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் வெற்றிலை பயிா் செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் வெற்றிலைகள் கா்நாடகம், கேரளம், குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், சேலம், கோவை, மதுரை, திருப்பூா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் தினந்தோறும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில், வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிா் மாா் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ. 5,000-க்கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிா் மாா் சுமை ஒன்று ரூ. 3,000-க்கும், வெள்ளைக்கொடி வெற்றிலை முதியம் பயிா் மாா் சுமை ஒன்று ரூ. 1,500-க்கும், கற்பூரி வெற்றிலை முதியம் பயிா் மாா் சுமை ஒன்று ரு. 1,000-க்கும் ஏலம் போனது. தற்போது அதிக அளவில் விஷேச நிகழ்ச்சிகள் எதுவும் இல்லாததால் வெற்றிலை விலை சரிவடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →