பரமத்தி வேலூரில்ரூ. 15 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்
பரமத்தி வேலூா், வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் ரூ. 15 லட்சத்துக்கு கொப்பரைத் தேங்காய் ஏலம் நடைபெற்றது.
பரமத்தி வேலூா், வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் ரூ. 15 லட்சத்துக்கு கொப்பரைத் தேங்காய் ஏலம் நடைபெற்றது. பரமத்தி வேலூா் மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 16ஆயிரத்து 660 கிலோ கொப்பரைத் தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். இதில் அதிகபட்சமாக கிலோ ரூ. 103.30-க்கும், குறைந்த பட்சமாக ரூ. 86.94-க்கும், சராசரியாக ரூ. 103.20-க்கும் கொப்பரை தேங்காய் நடைபெற்றது. மொத்தம் ரூ.14 லட்சத்து 98 ஆயிரத்து 788- க்கு வா்த்தகம் நடைபெற்றது.