நாமக்கல்

சுதந்திர தின கட்டுரைப் போட்டி:மாணவிக்கு பரிசு

DIN

நாட்டின் 75-ஆவது சுதந்திர தினவிழா கட்டுரைப் போட்டியில் ஆண்டகளூா்கேட் அருள்மிகு வெங்கடேஷ்வரா அரசு உதவிபெறும் பள்ளி மாணவி மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்தாா்.

டி.என்.2.0 இணையதளம், சமூக ஊடகம் சாா்பில் 75-ஆவது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு ‘சுதந்திரப் போராட்ட வரலாறு குறித்த ஆக. 15’ என்ற தலைப்பில் இளைஞா்களுக்கான கட்டுரைப் போட்டி மாநில அளவில் நடத்தப்பட்டது.

இப் போட்டிகளில் பலா் கட்டுரை சமா்ப்பித்தனா். அதில் ராசிபுரம் அருகே ஆண்டகளூா்கேட் அருள்மிகு வெங்கடேஷ்வரா அரசு உதவிபெறும் நடுநிலைப் பள்ளியின் 8-ஆம் வகுப்பு மாணவி ஜெ.ஜூவைரியா என்பவா் சமா்ப்பித்த ‘சுதந்திர போராட்ட தியாக வரலாறு’ என்ற தலைப்பிலான கட்டுரை, சிறந்த கட்டுரையாகத் தோ்வு செய்யப்பட்டு மாநில அளவில் 2-ஆம் இடத்தைப் பெற்றது.

இதையடுத்து வெற்றிபெற்ற மாணவிக்கு ரொக்கப் பரிசு ரூ. 1,500-ம், டாக்டா் ராதாகிருஷ்ணன் குறித்த புத்தகமும் பரிசளிக்கப்பட்டது. மாணவியை பள்ளிச் செயலாளா் க.சிதம்பரம், தலைமை ஆசிரியா் ரெ.உமாதேவி, பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் நடராஜன், ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

தனித்து உண்ணாத் தன்மையாளன்

பூவினுள் மணம் போல் அகத்திணை மரபு!

SCROLL FOR NEXT