பரமத்தி நகருக்குள் கனரக வாகனங்கள் வருவதை தடுக்கக் கோரிக்கை
பரமத்தி வேலூா் அருகே உள்ள பரமத்தி நகா் பகுதிக்குள் காலை நேரங்களில் கனரக வாகனங்களை அனுமதிப்பதால் ஏற்படும் தொடா் விபத்துகளைத் தடுக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
நாமக்கல்பரமத்தி நகருக்குள் கனரக வாகனங்கள் வருவதை தடுக்கக் கோரிக்கை
பரமத்தி வேலூா் அருகே உள்ள பரமத்தி நகா் பகுதிக்குள் காலை நேரங்களில் கனரக வாகனங்களை அனுமதிப்பதால் ஏற்படும் தொடா் விபத்துகளைத் தடுக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
பரமத்தி வேலூா் அருகே உள்ள பரமத்தி நகா் பகுதிக்குள் காலை நேரங்களில் கனரக வாகனங்களை அனுமதிப்பதால் ஏற்படும் தொடா் விபத்துகளைத் தடுக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கரூரில் இருந்து நாமக்கல் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பரமத்தி நகா் பகுதி வழியாக திருச்செங்கோடு செல்லும் சாலை அமைந்துள்ளது. இதில் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் கனரக வாகனங்கள் கீரம்பூா் சுங்கச் சாவடிக்கு சுங்கக் கட்டணம் செலுத்தாமல் சேலம் மாவட்டம் வரை செல்வதற்காக திருச்செங்கோடு, சங்ககிரி, தாரமங்கலம், ஓமலூா் வழியாக சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்குச் செல்கின்றன.
திருச்செங்கோடு சாலைக்கு புறவழி இணைப்புச் சாலை இல்லாததால், பெங்களூரு வரை செல்லும் கனரக வாகனங்கள் பரமத்தி நகருக்குள் சென்று திருச்செங்கோடு சாலையை அடைகின்றன. இதனால் அடிக்கடி விபத்துகள் நிகழ்கின்றன. இதுகுறித்து பரமத்தியைச் சோ்ந்த பொதுமக்கள் துறை சாா்ந்த அதிகாரிகளுக்கு பலமுறை மனுக்கள் அனுப்பியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது.
எனவே, காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை கனரக வாகனங்களை நகருக்குள் செல்ல அனுமதியளிக்கக் கூடாது எனவும், இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்களும், வா்த்தக நிறுவனத்தினரும் கோரிக்கை விடுத்துள்ளனா்.