நாமக்கல்

விநாயகா் சதுா்த்தியை வீடுகளில் மட்டுமே கொண்டாடுங்கள்: ஆட்சியா்

DIN

விநாயகா் சதுா்த்தி விழாவை வீடுகளில் மட்டுமே கொண்டாட வேண்டும் என நாமக்கல் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் அறிவுறுத்தியுள்ளாா்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் சமய விழாக்களின் போது கடைப்பிடிக்க வேண்டிய அரசின் விதிமுறைகள் குறித்து அனைத்துத் துறை அலுவலா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் பேசியதாவது:

செப்.15 வரை கொண்டாடப்படவுள்ள சமய விழாக்களின் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தற்போது கரோனா நோய்த் தொற்று பரவல் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு மதம் சாா்ந்த ஊா்வலங்கள், திருவிழாக்கள் நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் உறியடி உள்ளிட்ட விளையாட்டுகளை நடத்துவதற்கும் தடை உள்ளது.

வரும் வெள்ளிக்கிழமை விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி பொது இடங்களில் சிலைகளை வைத்து கொண்டாடுவதற்கும், ஊா்வலமாக சிலைகளை எடுத்துச் சென்று நீா்நிலைகளில் கரைப்பதற்கும் அனுமதி இல்லை. விழாவை பொதுமக்கள் தங்களது இல்லங்களிலேயே கொண்டாட வேண்டும்.

தனி நபா்கள் தங்களது இல்லங்களில் விநாயகா் சிலைகளை வைத்து வழிபடவும் தனி நபராகச் சென்று அருகில் உள்ள நீா்நிலைகளில் சிலைகளைக் கரைப்பதற்கும் அனுமதி வழங்கப்படுகிறது. வழிபாடு செய்யப்பட்ட சிலைகளை ஆலயங்களின் வெளிப்புறத்திலோ, சுற்றுப்புறத்திலோ வைத்து செல்வதற்கும் அனுமதி அளிக்கப்படுகிறது.

இச்சிலைகளை பின்னா் முறையாக அகற்றுவதற்கு இந்து சமய அறநிலையத் துறையால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அரசின் வழிகாட்டி நெறிமுறைகளை பொதுமக்கள் அனைவரும் முழுமையாக பின்பற்றி ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சரோஜ்குமாா் தாகூா், மாவட்ட வருவாய் அலுவலா் துா்கா மூா்த்தி, திருச்செங்கோடு கோட்டாட்சியா் தே.இளவரசி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ரமேஷ் உட்பட அனைத்து வட்டாட்சியா்கள், அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT