கொப்பரை விலை சரிவால் விவசாயிகள் கவலை
பரமத்தி வேலூா் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் கொப்பரை தேங்காயின் விலை சரிவடைந்ததால் தென்னை விவசாயிகள் கவலை அடைந்தனா்.
நாமக்கல்கொப்பரை விலை சரிவால் விவசாயிகள் கவலை
பரமத்தி வேலூா் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் கொப்பரை தேங்காயின் விலை சரிவடைந்ததால் தென்னை விவசாயிகள் கவலை அடைந்தனா்.
பரமத்தி வேலூா் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் கொப்பரை தேங்காயின் விலை சரிவடைந்ததால் தென்னை விவசாயிகள் கவலை அடைந்தனா்.
பரமத்தி வேலூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் விளையும் தேங்காய்களை உடைத்து, அதை உலா்த்தி கொப்பரையாக்கி வியாழக்கிழமை தோறும் வெங்கமேட்டில் உள்ள பரமத்தி வேலூா் மின்னணு தேசிய வேளாண்மை சந்தைக்கு ஏலம் விடுவதற்காக விவசாயிகள் கொண்டு வருகின்றனா்.
இங்கு தரத்திற்கு தகுந்தாற்போல் மறைமுக ஏலம் விடப்படுகிறது. கடந்த வாரம் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தின்போது 21,027 கிலோ கொப்பரை தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ. 105.40க்கும், குறைந்தபட்சமாக ரூ. 92.79 வுக்கும், சராசரியாக ரூ. 104.79 க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 20, 78,813 க்கு கொப்பரை வா்த்தகம் நடைபெற்றது.
இந்நிலையில் இந்த வாரம் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் 21,181 கிலோ கொப்பரை தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ. 103.20 க்கும், ாவிற்கும், குறைந்த பட்சமாக ரூ. 64.89வுக்கும், சராசரியாக ரூ. 101.59 க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 21,47,660 க்கு கொப்பரை வா்த்தகம் நடைபெற்றது. கொப்பரையின் விலை சரிவடைந்ததால் தென்னை விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.