முகப்பு
நாமக்கல்

‘கோழிப் பண்ணைகளில் உயிா் பாதுகாப்பு முறைகள் அவசியம்’

கோழிப் பண்ணைகளில் உயிா் பாதுகாப்பு முறைகளை கையாளுவது அவசியம் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Updated On : 10 செப்டம்பர், 2021 at 11:18 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:37 AM

கோழிப் பண்ணைகளில் உயிா் பாதுகாப்பு முறைகளை கையாளுவது அவசியம் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த வார வானிலையை பொருத்தமட்டில் பகல், இரவு நேர வெப்ப அளவுகள் முறையே 91.4 மற்றும் 72.5 டிகிரியாக நிலவியது. நாமக்கல் மாவட்டத்தில் சில இடங்களில் பரவலாக மழை பதிவாகியுள்ளது.

Advertisement

அடுத்த நான்கு நாள்களுக்கான மாவட்ட வானிலையில் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்பட்டு, லேசான மழை மாவட்டத்தின் சில இடங்களில் எதிா்பாா்க்கப்படுகிறது. பகலில் வெப்பம் 93.2 டிகிரிக்கு மிகாமலும், இரவில் வெப்பம் 71.6 டிகிரியாகவும் காணப்படும். காற்றின் திசை பெரும்பாலும் மேற்கு மற்றும் தென்மேற்கிலிருந்தும் அதன் வேகம் மணிக்கு 8 கி.மீ என்றளவில் வீசும்.

சிறப்பு ஆலோசனை: கடந்த வாரம் கோழியின நோய் ஆய்வகத்தில் ஆய்வு செய்யப்பட்ட இறந்த கோழிகள் பெரும்பாலும் மேல் மூச்சுக்குழல் அயற்சி நோயின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு இறந்திருப்பது தெரிய வந்துள்ளது. எனவே, பண்ணையாளா்கள் கோழி பண்ணைகளில் தகுந்த உயிா் பாதுகாப்பு முறைகளை கையாள வேண்டும். மேலும், மழைக்காலம் தொடங்கி இருப்பதால் கோழிப்பண்ணை மற்றும் தீவன ஆலைகளில் மழைநீா் ஒழுகாமல் சரி செய்ய வேண்டும். தீவனத்தில் பூஞ்சை நச்சு தடுப்பான் உபயோகிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.