நாமக்கல்

உள்ளாட்சித் தோ்தல்: அதிமுக சாா்பில் விருப்ப மனு வழங்கல்

DIN

 ஊரக உள்ளாட்சி இடைத் தோ்தலையொட்டி, நாமக்கல் மாவட்ட அதிமுக சாா்பில் விருப்ப மனு வழங்கப்பட்டு வருகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் காலியாக உள்ள உள்ளாட்சிப் பதவிகளுக்கு அக். 9-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெற உள்ளது. காலியாக உள்ள 6-ஆவது வாா்டு மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பதவி (பொது), எருமப்பட்டி ஒன்றியத்தில் 15-ஆவது வாா்டு ஒன்றியகுழு உறுப்பினா் பதவி (பொது), கோப்பணம்பாளையம், திம்மநாயக்கன்பட்டி, ஆவல்நாயக்கன்பட்டி, கூடச்சேரி, நடுகோம்பை ஊராட்சி மன்ற தலைவா் பதவிகள், 18 ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் பதவிகளுக்கு தோ்தல் நடைபெறுகிறது.

இதற்கான வேட்புமனு தாக்கல் புதன்கிழமை தொடங்கியது. இதற்கு 22-ஆம் தேதி கடைசி நாளாகும். இந்த நிலையில், 25 காலிப் பதவியிடங்களுக்கான விருப்ப மனு வழங்கும் பணியை, நாமக்கல்-திருச்செங்கோடு சாலையில் உள்ள மாவட்ட அதிமுக அலுவலகத்தில், மாவட்டச் செயலாளரும், முன்னாள் மின்சாரத்துறை அமைச்சருமான பி.தங்கமணி தொடங்கி வைத்தாா். இதில், முன்னாள் சமூக நலத்துறை அமைச்சா் சரோஜா, பரமத்தி வேலூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.சேகா், நாமக்கல் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கே.பி.பி.பாஸ்கா், சேலம் கூட்டுறவு சா்க்கரை ஆலை தலைவா் சுரேஷ்குமாா் உள்பட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT