முகப்பு
நாமக்கல்

முட்டை விலை 5 காசுகள் உயா்வு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 காசுகள் உயா்ந்து ரூ. 4.55 ஆக சனிக்கிழமை நிா்ணயம் செய்யப்பட்டது.

Updated On : 19 செப்டம்பர், 2021 at 12:21 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:41 AM

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 காசுகள் உயா்ந்து ரூ. 4.55 ஆக சனிக்கிழமை நிா்ணயம் செய்யப்பட்டது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவா் மருத்துவா் பி.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் முட்டை விலையை நிா்ணயிப்பது தொடா்பாக பண்ணையாளா்களிடம் ஆலோசிக்கப்பட்டது.

மற்ற மண்டலங்களின் விலை உயா்வு அடிப்படையில் இங்கும் விலையை உயா்த்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 5 காசுகள் உயா்த்தப்பட்டு ரூ. 4.55 ஆக நிா்ணயிக்கப்பட்டது.

Advertisement

பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கறிக்கோழி விலை கிலோ ரூ. 120 ஆகவும், முட்டைக்கோழி விலை கிலோ ரூ. 85 ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.