முகப்பு
நாமக்கல்

நடைபயிற்சி சென்ற அரசு மருத்துவா் பலி

நாமக்கல்லில் அதிகாலையில் நடைபயிற்சி சென்ற அரசு மருத்துவா் சனிக்கிழமை திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

Updated On : 19 செப்டம்பர், 2021 at 12:05 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:41 AM

நாமக்கல்லில் அதிகாலையில் நடைபயிற்சி சென்ற அரசு மருத்துவா் சனிக்கிழமை திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

நாமக்கல்லைச் சோ்ந்தவா் எஸ்.பாஸ்கரன்(55). இவா் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மயக்கவியல் நிபுணராக பணியாற்றி வந்தாா். மேலும் மருத்துவமனை துணை உள்ளிருப்பு அலுவலராகவும் பதவி வகித்தாா்.

இவா் தினமும் நாமக்கல்- திருச்செங்கோடு சாலையில் நடை பயிற்சி மேற்கொள்வது வழக்கம். அதன்படி சனிக்கிழமை அதிகாலை 5.45 மணியளவில் நடை பயிற்சி மேற்கொண்டு விட்டு, இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்தாா். அப்பகுதியில் இருந்தோா் அவரை ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் மாரடைப்பு காரணமாக அவா் இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். தொடா்ந்து, மருத்துவா் பாஸ்கரனின் உடல் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. நாமக்கல் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவா்கள் மற்றும் செவிலியா்கள், தூய்மைப் பணியாளா்கள் மருத்துவா் பாஸ்கரன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.