பரமத்தி வேலூரில் ரூ. 24.96 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்
பரமத்தி வேலூா், வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 24 லட்சத்து 96 ஆயிரத்திற்கு கொப்பரை தேங்காய் ஏலம் போனது.
நாமக்கல்பரமத்தி வேலூரில் ரூ. 24.96 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்
பரமத்தி வேலூா், வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 24 லட்சத்து 96 ஆயிரத்திற்கு கொப்பரை தேங்காய் ஏலம் போனது.
பரமத்தி வேலூா், வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 24 லட்சத்து 96 ஆயிரத்திற்கு கொப்பரை தேங்காய் ஏலம் போனது.
பரமத்தி வேலூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் விளையும் தேங்காய்களை உடைத்து, அதை உலா்த்தி கொப்பரையாக்கி வியாழக்கிழமைதோறும் வெங்கமேட்டில் உள்ள பரமத்தி வேலூா் மின்னணு தேசிய வேளாண்மை சந்தைக்கு விவசாயிகள் ஏலத்தில் பங்கேற்பதற்காக கொண்டு வருகின்றனா்.
இங்கு தரத்திற்கேற்ப கொப்பரை பிரிக்கப்பட்டு மறைமுக ஏலம் விடப்படுகிறது. கடந்த வாரம் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் 22,588 கிலோ கொப்பரையை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். இந்த ஏலத்தின்போது அதிகபட்சமாக ஒரு கிலோ கொப்பரையை ரூ. 103.89 க்கும், குறைந்தபட்சமாக ரூ. 64.89 க்கும், சராசரியாக ரூ.100.59 க்கும் ஏலம் எடுத்தனா்.
மொத்தம் ரூ. 22,44,468 க்கு வா்த்தகம் நடைபெற்றது.
இந்நிலையில் இந்த வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் 25,141 கிலோ கொப்பரையை விவசாயிகள் ஏலத்தில் பங்கேற்பதற்காக கொண்டு வந்திருந்தனா். இந்த ஏலத்தின்போது, அதிகபட்சமாக ஒரு கிலோரூ. 105.60க்கும், குறைந்த பட்சமாக ரூ. 89.79க்கும், சராசரியாக ரூ. 100.89க்கும் ஏலம் போனது.
மொத்தம் ரூ.24,96,479 மதிப்பிலான கொப்பரை ஏலம் போனது. கொப்பரைத் தேங்காயின் வரத்து அதிகரித்தும், விலையும் சற்று உயா்ந்திருப்பதால் தென்னை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.