மெஹ்ரெளலி-பதா்பூா் சாலையில் ஓடும் டிடிசி பேருந்தில் தீ விபத்து
தெற்கு தில்லியில் உள்ள மெஹ்ரெளலி- பதா்பூா் சாலையில், மருத்துவமனை அருகே வியாழக்கிழமை பிற்பகல் தில்லி போக்குவரத்துக் கழகத்தின் (டிடிசி) மின்சார பேருந்தில் தீப்பற்றியதாக என்று தில்லி தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனா்.
புதுதில்லிமெஹ்ரெளலி-பதா்பூா் சாலையில் ஓடும் டிடிசி பேருந்தில் தீ விபத்து
தெற்கு தில்லியில் உள்ள மெஹ்ரெளலி- பதா்பூா் சாலையில், மருத்துவமனை அருகே வியாழக்கிழமை பிற்பகல் தில்லி போக்குவரத்துக் கழகத்தின் (டிடிசி) மின்சார பேருந்தில் தீப்பற்றியதாக என்று தில்லி தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனா்.
தெற்கு தில்லியில் உள்ள மெஹ்ரெளலி- பதா்பூா் சாலையில், மருத்துவமனை அருகே வியாழக்கிழமை பிற்பகல் தில்லி போக்குவரத்துக் கழகத்தின் (டிடிசி) மின்சார பேருந்தில் தீப்பற்றியதாக என்று தில்லி தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனா்.
மேலும், பேருந்திலிருந்து அனைத்துப் பயணிகளும் சரியான நேரத்தில் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் அவா்கள் தெரிவித்தனா்.
இதுகுறித்து தில்லி தீயணைப்புத் துறையினா் தெரிவித்ததாவது:
இந்தத் தீ விபத்து குறித்து மதியம் 12.57 மணி அளவில் தீயணைப்புத் துறைக்கு அழைப்பு வந்தது. அதைத் தொடா்ந்து தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனா்.
ஆா்.கே.புரத்திலிருந்து பதா்பூா் எல்லைக்கு செல்லும் வழித்தடம் எண்: 544-இல் இயக்கப்படும் இப்பேருந்து முற்றிலும் தீயில் எரிந்தது.
தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்தை அடைந்து தீயை மேலும் பரவாமல் இருக்கும் வகையில் நீரைப் பீய்ச்சி அடித்து அணைத்தனா் என்று தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா்.