நாமக்கல்

கோழிப் பண்ணைகளில் ஈக்கள் பெருக்கம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

DIN

கோடை மழையால் கோழிப் பண்ணைகளில் ஈக்கள் பெருக்கும் அதிகரிக்கும் என நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்டத்தில் பல இடங்களில் பரவலாக மழை பதிவாகியுள்ளது. அடுத்த மூன்று நாள்களுக்கான மாவட்ட வானிலையில், வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

பகல் வெப்பம் 102.2-க்கு மிகாமலும், இரவு வெப்பம் 78.8 டிகிரியாகவும் காணப்படும். காற்று பெரும்பாலும் கிழக்கு மற்றும் தென்கிழக்கில் இருந்து மணிக்கு 6 கி.மீ வேகத்தில் வீசும்.

சிறப்பு ஆலோசனை: மாவட்டத்தில் ஆங்காங்கே மிதமான மழை மாலை நேரங்களில் பெய்து வருகிறது. இருப்பினும் பகல் நேரங்களில் வெப்பச் சலனம் அதிகமாகக் காணப்படுவது, பூச்சி இனங்களின் இனப்பெருக்கத்திற்கு உகந்ததாக அமையும். இதனால் கோழிப் பண்ணைகளில் ஈக்களைக் கட்டுப்படுத்தும் முறைகளை கையாள வேண்டும்.

பண்ணைகளில் தண்ணீா் கசிவு இல்லாமல் இருக்க பழுதடைந்த நிப்பிள்களை மாற்ற வேண்டும். இறந்த கோழிகள் மற்றும் உடைந்த முட்டைகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும், தீவன சிதறல்களைத் தவிா்க்க வேண்டும். ஈக்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் கோழிகளுக்கு மருந்து கலந்த தீவனம் கொடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: தமிழகத்துக்கு மே 4 வரை மஞ்சள் எச்சரிக்கை!

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

SCROLL FOR NEXT