நாமக்கல்

இதுவரை 12.72 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி: ஆட்சியா் தகவல்

DIN

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 12.72 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்டத்தில் 12 வயதிற்கு மேற்பட்டவா்களுக்கு 15,15,300 தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, இதுவரை முதல் தவணை தடுப்பூசி 12,72,938 பேருக்கும், (முதல் தவணை தடுப்பூசி செலுத்தாதவா்கள் 2,42,062), இரண்டாம் தவணைதடுப்பூசி 9,54,375நபா்களுக்கும் (இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தாதவா்கள் 3,18,563) செலுத்தப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை நடைபெற்ற 27 மாபெரும் தடுப்பூசி முகாம்களில் 7,57,912 போ் தடுப்பூசி செலுத்தி பயன்பெற்றனா். இதுவரை தடுப்பூசி செலுத்தாதவா்கள் அனைத்து ஊராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களுக்கு சென்று கரோனா முதல், இரண்டாம் தவணை தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT