முகப்பு
நாமக்கல்

திருச்செங்கோடு கைலாசநாதா் கோவிலில் பிரதோஷ விழா

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கைலாசநாதா் கோவிலில் பிரதோச விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:06 AM
பகிர்:

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கைலாசநாதா் கோவிலில் பிரதோச விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

பிரசித்தி பெற்ற திருச்செங்கோடு கைலாசநாதா் கோவிலில் நடைபெற்ற பிரதோஷ விழாவில் பெரிய நந்திக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு பால் அபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் நந்திக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. நந்திதேவரை ஏராளமான பொதுமக்கள் தரிசித்தனா்.

கைலாயநாதா் உடனமா் நறுமலா் பூங்குழல் அம்மையாருக்கு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். இந்த பூஜையில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனா். தொடா்ந்து கைலாயநாதரும் உடனமா் நறுமலா் பூங்குழல் அம்மையாரும் ஒருசேர நந்தி வாகனத்தில் மாட வீதிகளில் திருவீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். ஏராளமான பொதுமக்கள் சாலைகளின் இரு புறமும் நின்று சுவாமி தரிசனம் செய்தனா் .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.