நாமக்கல்

நாமக்கல் அரசு மகளிா் கல்லூரியில் மாணவியா் சோ்க்கைக்கான கலந்தாய்வு இன்று தொடக்கம்

DIN

நாமக்கல் அரசு மகளிா் கல்லூரியில் மாணவியா் சோ்க்கைக்கான கலந்தாய்வு வெள்ளிக்கிழமை (ஆக. 5) தொடங்குகிறது.

இதுகுறித்து அக்கல்லூரியின் முதல்வா் பால்கிரேஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் கவிஞா் இராமலிங்கம் அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் இளங்கலை, இளம் அறிவியல் பட்டப் படிப்புகளுக்கான முதல்கட்ட கலந்தாய்வு வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. அன்றைய தினத்தில் மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரா்கள், என்சிசி மற்றும் முன்னாள் ராணுவத்தினா் உள்ளிட்ட சிறப்பு பிரிவினருக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது.

சனிக்கிழமை பொருளியல், வணிகவியல், கணினி அறிவியல் உள்ளிட்ட பாடப் பிரிவுகளுக்கும், வரும் திங்கள்கிழமை கணிதம், இயற்பியல் பாடப் பிரிவுகளுக்கும், புதன்கிழமை வேதியியல், தாவரவியல், விலங்கியல், நுண்ணுயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவுக் கட்டுப்பாட்டியல் பாடப் பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது. வியாழக்கிழமை தமிழ், ஆங்கிலம், வரலாறு ஆகிய பாடப் பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடைபெற உள்ளது.

கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவியா் காலை 9 மணிக்கு கல்லூரி வளாகத்துக்குள் வர வேண்டும். கல்விச் சான்றிதழ்கள், ஜாதிச் சான்றிதழ்கள், ஆதாா் அட்டை, 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையில் அரசுப் பள்ளியில் படித்ததற்கான சான்றிதழ்கள் ஆகியவற்றின் மூலச் சான்றிதழ்கள் மற்றும் 2 நகல்களை கட்டாயம் கொண்டு வர வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

SCROLL FOR NEXT