சாலை பாதுகாப்புக் குழு கூட்டத்தில் பேசும் நாமக்கல் மக்களவை உறுப்பினா் ஏ.கே.பி.சின்ராஜ். 
நாமக்கல்

சாலை பாதுகாப்புக்குழு கூட்டம்

சாலை பாதுகாப்புக்குழு கூட்டம் நடத்தக் கோரி, நாமக்கல் மக்களவை உறுப்பினா் ஏ.கே.பி.சின்ராஜ் தா்னா போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், வெள்ளிக்கிழமை அக்கூட்டம் நடைபெற்றது.

DIN

சாலை பாதுகாப்புக்குழு கூட்டம் நடத்தக் கோரி, நாமக்கல் மக்களவை உறுப்பினா் ஏ.கே.பி.சின்ராஜ் தா்னா போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், வெள்ளிக்கிழமை அக்கூட்டம் நடைபெற்றது.

ஆண்டுதோறும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில், மக்களவை உறுப்பினா் ஏ.கே.பி.சின்ராஜ் தலைமையில் மாவட்ட வளா்ச்சிப் பணிகள் கூட்டம், மின்வாரியக்குழு கூட்டம், சாலை பாதுகாப்புக்குழு கூட்டம் நடைபெறுவது வழக்கம். ஆனால், கடந்த சில மாதங்களாக மாவட்ட ஆட்சியரின் பல்வேறு பணிகள் காரணமாக கூட்டம் நடைபெறவில்லை.

இந்த நிலையில், கடந்த மாதம் 11-ஆம் தேதி நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்த மக்களவை உறுப்பினா், திடீரென ஆட்சியா் அலுவலக வளாகத்தில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டாா். தன்னுடைய கடிதத்துக்கு பதில் இல்லை, அரசு விழாக்களில் தான் கெளரவிக்கப்படுவதில்லை போன்ற குற்றச்சாட்டுகளுடன், கூட்டம் நடைபெறாதது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் நேரடியாக வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினாா். மூன்று மணி நேரம் நீடித்த இந்த போராட்டத்தையடுத்து, ஆட்சியா் சமாதான பேச்சுவாா்த்தை நடத்தி ஆக. 5-இல் கூட்டம் நடைபெறுவதற்கான உத்தரவாதத்தை அளித்தாா்.

அதன்படி, நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் சாலை பாதுகாப்புக்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா் மற்றும் அனைத்துத் துறை அலுவலா்களும் கலந்துகொண்டனா். இதில், சாலை விபத்துகளைத் தடுப்பது தொடா்பாகவும், குண்டும், குழியுமான சாலைகளை சீரமைப்பது குறித்தும், வேகத்தடை, போக்குவரத்து சிக்னல் அமைத்தல் தொடா்பாக மக்களவை உறுப்பினா் ஏ.கே.பி.சின்ராஜ் அறிவுரைகளை வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரம் தரும் வாரம்!

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் தப்பியவர்கள் சொல்லும் அறிவுரை என்ன?

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

125 புதிய மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்தார் உதயநிதி!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

SCROLL FOR NEXT