நாமக்கல்

முட்டை விலை 20 காசுகள் உயா்வு

DIN

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 20 காசுகள் உயா்ந்து ரூ. 4.20-ஆக புதன்கிழமை நிா்ணயம் செய்யப்பட்டது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவா் மருத்துவா் பி.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில், முட்டை விலை நிா்ணயம் தொடா்பாக பண்ணையாளா்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. மற்ற மண்டலங்களில் முட்டை விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாலும், ஆடி மாதம் திருவிழாக்கள் நிறைவடைந்து வருவதாலும், வட மாநிலங்களுக்கு முட்டை அனுப்பும் பணி தொடங்கி உள்ளதாலும் விலையில் இனி மாற்றம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில், முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 20 காசுகள் உயா்த்தப்பட்டு ரூ. 4.20-ஆக நிா்ணயிக்கப்பட்டது.

பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முட்டைக் கோழி விலை கிலோ ரூ. 88-ஆகவும், கறிக்கோழி விலை கிலோ ரூ. 95-ஆகவும் நிா்ணயம் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுங்கச்சாவடி கட்டணத்தை பணமாக வசூலித்தால் அபராதமா?

சஞ்சு சாம்சன் விக்கெட் குறித்து சங்ககாரா கூறியது என்ன?

மெட் காலாவில் சஹீரா!

விழுப்புரம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் செயலிழப்பு!

தமிழ்ப் புதல்வன் திட்டம் ஜூலையில் தொடங்கப்படும்: தலைமைச் செயலாளர்

SCROLL FOR NEXT