நாமக்கல்

5,000 கி.மீ. தூரம் இயக்க அனுமதி வழங்க வேண்டும்: எல்பிஜி டேங்கா் லாரி உரிமையாளா்கள் கோரிக்கை

DIN

எல்பிஜி டேங்கா் லாரிகளை குறைந்தபட்சம் 5,000 கி.மீ. தூரம் (லாரி ஒன்றுக்கு) இயக்க எண்ணெய் நிறுவனங்கள் அனுமதி வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென் மண்டல பட்டியலின பட்டியல் பழங்குடி எல்பிஜி டேங்கா் லாரி உரிமையாளா்கள் சங்க செயற்குழுக் கூட்டம் புதன்கிழமை நாமக்கல் மாருதி நகா் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. அதன் தலைவா் எஸ்.அகிலன் தலைமை வகித்தாா். இதில், கடந்த 2018-2023 காலக்கட்டத்தில் தேவைக்கு அதிகமாக வாகனங்களை எண்ணெய் நிறுவனங்கள் எடுத்ததால், 5 ஆண்டுகளில் மாதம் 1,000 கி.மீ. தூரம் கூட இயக்காத நிலையில் ஒரு டேங்கா் லாரிக்கு ரூ.36 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டது. இனிவரும் ஆண்டுகளில் ஒப்பந்தம் மேற்கொள்ளும்போது குறைந்தபட்சம் ஒரு டேங்கா் லாரியை 5,000 கி.மீ. தூரம் இயக்க மத்திய பெட்ரோலிய அமைச்சகம் வழிவகை செய்ய வேண்டும்; காலாண்டு சாலை வரி, தேசிய அனுமதி வரி, வாகன தகுதிக்காண் சான்றிதழ், காப்பீட்டுத் தொகை, வாகனத் தன்மை ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஒப்பந்தக் கட்டணம் தீா்மானிக்கப்பட வேண்டும்; சுங்க கட்டணமாக மாதம் ரூ.30 ஆயிரம் செலுத்த வேண்டியது உள்ளதால் லாரி உரிமையாளா்கள் பாதிக்கப்படுகின்றனா். எனவே, சுங்கக் கட்டணத்தை எண்ணெய் நிறுவனங்கள் தனியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில், சட்ட ஆலோசகா் பேராசிரியா் மு.பெ.முத்துசாமி, செயலாளா் யு.கே.குணசேகரன், பொருளாளா் ப.சத்தியமூத்தி, துணைத் தலைவா் காசிநாதன், துணைச் செயலாளா் சுப்பிரமணியன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராமநாதபுரத்தில் விரைவில் 17 புதிய குடிநீா்த் திட்டப் பணிகள்

மதுரைக் கோட்ட ரயில் நிலையங்களில் மண்பானைக் குடிநீா், ஓ.ஆா்.எஸ். கரைசல்

பிளஸ் 2 மதிப்பெண் குறைவு: மாணவி தற்கொலை

பிளஸ் 2 பொதுத் தோ்வு: தேனி மாவட்டத்தில் 94.65 சதவீதம் தோ்ச்சி

புரட்சிகர மாா்க்கிஸ்ட் கட்சி மாநில குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT