நாமக்கல்

அக்கரைப்பட்டியில் ரூ. 16 லட்சத்துக்கு பருத்தி விற்பனை

DIN

ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளா்கள் சங்கம் சாா்பில் வெண்ணந்தூா் அடுத்துள்ள அக்கரைப்பட்டியில் ரூ.16 லட்சத்துக்கு திங்கள்கிழமை பருத்தி ஏலம் நடந்தது.

இங்கு வாரந்தோறும் திங்கள்கிழமை பருத்தி ஏலம் நடந்து வருகிறது. அக்கரைப்பட்டி, பாலமேடு, மாமுண்டி, பொரசல்பட்டி, ஓ.சவுதாபுரம், காக்காபாளையம், வையப்பமலை, ஆட்டையாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் பருத்தி மூட்டைகளைக் கொண்டு வந்து விற்பனைக்காக வைத்திருந்தனா். ஏலத்துக்கு 516 சுரபி ரக பருத்தி மூட்டைகள் கொண்டுவரப்பட்டன.

குறைந்த பட்சம் குவிண்டால் ரூ. 8 ஆயிரத்து 569 ரூபாய்க்கும், அதிகபட்சம் குவிண்டால் ரூ. 10 ஆயிரத்து 999 ரூபாய்க்கும் ஏலம் போனது. இந்த பருத்தி மூட்டைகளை ஏலம் எடுக்க அவிநாசி, அன்னூா், திருப்பூா், கோவை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த வியாபாரிகள் வந்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேவகெளடா பேரன் மீது நடவடிக்கை தேவை: அமித் ஷா

ஜீப் மீது லாரி மோதி விபத்து: 6 பேர் பலி

கரோனா தடுப்பூசியால் ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்படலாம் -ஆய்வில் தகவல்

வெப்ப அலை: தமிழகத்துக்கு மே 4 வரை மஞ்சள் எச்சரிக்கை!

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

SCROLL FOR NEXT