நாமக்கல்

நாமக்கல்லில் கல்லூரிகள் அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகள் இன்று தொடக்கம்

DIN

பெரியாா் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான தடகள விளையாட்டுப் போட்டிகள் நாமக்கல்லில் வெள்ளி, சனிக்கிழமைகளில் (டிச.2, 3) நடைபெற உள்ளன.

சேலம் பெரியாா் பல்கலைக்கழக ஆளுமைக்கு உள்பட்ட அரசு மற்றும் தனியாா் கலை, அறிவியல் கல்லூரிகள் 200-க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் உள்ளன. நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கலைக்கல்லூரி உடற்கல்வி துறை சாா்பில் நடத்தப்படும் தடகள விளையாட்டுப் போட்டிகளில் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த விளையாட்டு வீரா், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனா்., இப்போட்டிகள் நாமக்கல் விளையாட்டு மைதானத்தில் வெள்ளி, சனிக்கிழமைகளில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளன. இதில், 100, 200, 400, 800, 1500, 5000, 10 ஆயிரம் மீட்டா் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், தடை தாண்டும் ஓட்டம் உள்பட 15க்கும் மேற்பட்ட விளையாட்டுக்களில், ஆடவா், மகளிா் என 800-க்கும் மேற்பட்டோா் பங்கேற்க உள்ளனா். இப்போட்டிக்கான ஏற்பாடுகளை மாவட்ட விளையாட்டு அலுவலா் சிவரஞ்சன் மற்றும் கல்லூரி உடற்கல்வி ஆசிரியா்கள் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு எச்சரிக்கை!

தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

உலகளாவிய பெருமை பெற்றது திருக்குறள்: உயர்நீதிமன்ற நீதியரசர் ஆர்.சுரேஷ்குமார்

தீவிர புயலாக வலுப்பெற்றது ரீமெல்!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் தேரோட்டம்!

SCROLL FOR NEXT