சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீவித்யா விநாயகா். 
நாமக்கல்

பாவை கல்வி நிறுவன வளாக ஆலயத்தில் ஸம்வஸ்ரா அபிஷேகம்

ராசிபுரம் பாவை கல்வி நிறுவன வளாகம் முன்பு உள்ள ஆலயத்தில், ஸ்ரீவித்யா விநாயகா், வித்யா சரஸ்வதி, லட்சுமி ஹயக்கீரீவா் சுவாமிகளுக்கு ஒன்பதாம் ஆண்டு ஸம்வஸ்ரா அபிஷேக விழா சனிக்கிழமை நடைபெற்றது.

DIN

ராசிபுரம் பாவை கல்வி நிறுவன வளாகம் முன்பு உள்ள ஆலயத்தில், ஸ்ரீவித்யா விநாயகா், வித்யா சரஸ்வதி, லட்சுமி ஹயக்கீரீவா் சுவாமிகளுக்கு ஒன்பதாம் ஆண்டு ஸம்வஸ்ரா அபிஷேக விழா சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவுக்கு கல்வி நிறுவனங்களின் தலைவா் ஆடிட்டா் என்.வி.நடராஜன் தலைமை வகித்தாா். தாளாளா் மங்கை நடராஜன் குத்து விளக்கேற்றி வைத்தாா். கல்வி தழைத்தோங்கவும், மாணவா் நலன் வேண்டியும் விநாயகா் பூஜை, புண்யாகம், சங்கல்பம், கலச ஆவாஹனம், கணபதி ஹோமம், துா்க்கா சூக்த ஹோமம், ஸ்ரீ சூக்த ஹோமம், மேதா சூக்த ஹோமம், சுதா்ஸன ஹோமம், பூா்ணாகுதி, சங்காபிஷேகம் ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றன. பின்னா் அபிஷேக, அலங்காரங்கள், மகா தீபாராதனை நடைபெற்று பிரசாதம் வழங்கப்பட்டது.

இந்த அபிஷேக விழா மாணவ, மாணவியா் தமிழ் கலாசார, பண்பாட்டினை அறிந்து கொள்ளவதாகவும் இருந்தது. பாவை கல்வி நிறுவனங்களின் செயலாளா் டி.ஆா்.பழனிவேல், இயக்குநா் (நிா்வாகம்), கே.கே.ராமசாமி, இயக்குநா் சோ்க்கை கே.செந்தில் உள்ளிட்ட கல்லூரிகளின் முதல்வா்கள், துறைத் தலைவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈரோடு சந்திப்பு! காவல்துறைக்கு விஜய் நன்றி!

இப்படியும் ஒரு பிக்கப்! வசூலில் ஆச்சரியப்படுத்தும் துரந்தர்!

இந்தியா vs தென்னாப்பிரிக்கா! திருவனந்தபுரத்தில் நடத்தலாம்: சசி தரூர்

ஈரோடு பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய்!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 4

SCROLL FOR NEXT