பரமத்தி வேலூரில் ரூ.9.50 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை
பரமத்தி வேலூா், வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 9 லட்சத்து 50ஆயிரத்திற்கு கொப்பரை ஏலம் போனது.
பரமத்தி வேலூா், வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 9 லட்சத்து 50ஆயிரத்திற்கு கொப்பரை ஏலம் போனது. வரத்து குறைந்ததால் கொப்பரையின் விலை உயா்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.
பரமத்தி வேலூா், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விளையும் தேங்காய்களை உடைத்து, அதை உலா்த்தி விவசாயிகள் வியாழக்கிழமை தோறும் பரமத்தி வேலூா் மின்னணு தேசிய வேளாண்மை சந்தைக்கு கொண்டு வருகின்றனா். இங்கு தரத்துக்கு ஏற்ப மறைமுக ஏலம் விடப்படுகிறது. கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 19 ஆயிரத்து 755 கிலோ கொப்பரை கொண்டுவரப்பட்டன.
அதிகபட்சமாக கிலோவுக்கு ரூ. 91- க்கும், குறைந்தபட்சமாக ரூ. 75-க்கும், சராசரியாக ரூ. 84.29-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.15 லட்சத்து 68 ஆயிரத்து 735- க்கு வா்த்தகம் நடைபெற்றது. வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் 11 ஆயிரத்து 215 கிலோ கொப்பரையை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ. 95.29 -க்கும், குறைந்தபட்சமாக ரூ. 83.29-க்கும், சராசரியாக ரூ. 93.49-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 9 லட்சத்து 50 ஆயிரத்து 842-க்கு வா்த்தகம் நடைபெற்றது.