இருசக்கர வாகனத்திலிருந்து விழுந்தவா் பலி
பரமத்தி வேலூா் வட்டம், ஜேடா்பாளையம் அருகே இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.
பரமத்தி வேலூா் வட்டம், ஜேடா்பாளையம் அருகே இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.
ஜேடா்பாளையம் அருகே உள்ள கண்டிப்பாளையத்தைச் சோ்ந்த லாரி ஓட்டுநரான சுகுமாா் (24) தனது இருசக்கர வாகனத்தில் ஆனங்கூா் அருகே உள்ள கழுவங்காடு பகுதிக்கு சென்று கொண்டிருந்தாா். அப்போது, கட்டுப்பாட்டை இழந்து வாகனம் கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்த சுகுமாா் ஈரோட்டில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு, அவா் உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து ஜேடா்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.