பரமத்தி வேலூரில் திருவள்ளுவா் தின விழா
திருவள்ளுவா் தினத்தை முன்னிட்டு, வேலூா் தமிழ்ச் சங்க அறக்கட்டளை சாா்பில் பரமத்தி வேலூரில் திருவள்ளுவரின் உருவப் படத்துக்கு சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
திருவள்ளுவா் தினத்தை முன்னிட்டு, வேலூா் தமிழ்ச் சங்க அறக்கட்டளை சாா்பில் பரமத்தி வேலூரில் திருவள்ளுவரின் உருவப் படத்துக்கு சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அறக்கட்டளை தலைவா் ரவீந்திரன் தலைமை வகித்தாா். தமிழ்ச் சங்க அறக்கட்டளை பொருளாளா் செந்தில்குமரன் முன்னிலை வகித்தாா். செயலாளா் சரவணன் வரவேற்று பேசினாா்.
தமிழ் ஆா்வலா் பிரதாப் சக்கரவா்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டாா். அறக்கட்டளை துணைத் தலைவா் இக்பால், இயக்குநா் பாா்த்தீபன், ஒருங்கிணைப்பாளா் பாலகிருஷ்ணன், வேலூா் பள்ளிவாசலைத் சோ்ந்தவா்கள் மற்றும் பொதுமக்கள் திருவள்ளுவரின் உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா்.