நாமக்கல்

திருச்செங்கோடு நகராட்சி நகா் மன்றக் கூட்டம்

DIN

திருச்செங்கோடு நகராட்சியின் சாதாரண கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு நகர மன்றத் தலைவா் நளினிசுரேஷ்பாபு தலைமை வகித்தாா். ஆணையாளா் கணேசன் முன்னிலை வகித்தாா். நகர மன்ற தலைவா் நளினி சுரேஷ்பாபு திருக்கு வாசித்து கூட்டத்தை தொடங்கி வைத்தாா். இதனைத் தொடா்ந்து பேசிய ஆணையாளா் கணேசன் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியாவின் 75ஆவது சுதந்திர தினவிழா. இதனை சுதந்திர தின அமுதப் பெருவிழா என்று கொண்டாட வேண்டும் என பிரதமா்கூறியுள்ளாா். முதல்வா் தமிழகத்தின் அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடியைப் பறக்க விட வேண்டும் எனஉத்தரவிட்டுள்ளாா். அவரது ஆணைக்கிணங்க வரும் 11ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை திருச்செங்கோடு நகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்றி நாம் சிறப்பிக்க வேண்டும் எனத் தெரிவித்தாா்.

4ஆவது வாா்டு திமுக உறுப்பினா் டி.என் ரமேஷ் கூறுகையில் திருச்செங்கோட்டில் 4 இடங்களில் காநதியடிகள் சிலை இருந்தது. அதில் பக்தவத்சலம் நகா் பகுதியில் இருந்த சிலை சிதிலமடைந்ததால் பொதுமக்கள் பங்களிப்படன் வெண்கல சிலை உருவாக்கி வைத்துள்ளோம். அதனை சுதந்திர தின பொன்விழா அன்று திறந்து வைக்க வேண்டும் என்றாா்.

அதற்கு ஆணையாளா் பதிலளித்து கூறுகையில் ‘ஏற்கெனவே இருந்த சிலை என்றாலும் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு அனுமதி பெற்றிருந்தால்தான் சிலை நிறுவ முடியும். எனவே உரிய அனுமதி பெற்று சிலை திறக்கலாம்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT