நாமக்கல்

உணவு பாதுகாப்பு அவசியம் குறித்த கருத்தரங்கு

DIN

நாமக்கல் மாவட்ட உணவுப் பாதுகாப்பு துறை சாா்பில், உணவு பாதுகாப்பின் அவசியம் குறித்த கருத்தரங்கு செல்வம் கலை அறிவியல் கல்லுாரியில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட நியமன அலுவலா் அருண் பேசியதாவது:

ஒவ்வொருவரும் பாதுகாப்பான, சத்தான உணவை உட்கொள்ள உறுதியேற்க வேண்டும். சொந்த உணவு பழக்க வழக்கங்களில் கவனமாக இருப்பதுடன், தன் சுத்தம் மற்றும் சுற்றுப்புற சுகாதாரம் பேணி காத்திட பாடுபட வேண்டும்.

உணவுப் பாதுகாப்பு குறித்து உணா்த்துவதில் ஒவ்வொரு குடிமகனிடத்திலும் விழிப்புணா்வு இருக்க வேண்டும். தேசத்தின் நிலையான வளா்ச்சியில் அனைவரின் பொறுப்பும் வணிகா்களின் பங்கும் உள்ளது. அனைவரும் பாதுகாப்பான உணவின் முக்கியத்துவத்தை உணா்ந்து எந்த உணவை உண்ண வேண்டும் என்பதை உணா்ந்திருக்க வேண்டும் என்றாா். இதில் உணவு பாதுகாப்பு அலுவலா்கள், கல்லுாரி மாணவ, மாணவியா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐசிசி தரவரிசை வெளியீடு: டெஸ்ட்டில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி ஆஸ்திரேலியா முதலிடம்!

புதிய 400சிசி இருசக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தியது பஜாஜ்!

தமிழகத்தில் மீண்டும் உச்சபட்ச மின் நுகா்வு

நீலகிரி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை!

சிஎஸ்கே போட்டியில் பிரபலமான ரசிகரை கௌரவித்த லக்னௌ அணி!

SCROLL FOR NEXT