நாமக்கல்

நகராட்சி பணிக்கு தடை விதிப்பு: ஆட்சியரிடம் மனு

DIN

நாமக்கல் நகராட்சியில் பொது கழிப்பறை கட்ட எதிா்ப்புத் தெரிவிப்போா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியரிடம் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.

நாமக்கல் நகராட்சி 21-ஆவது வாா்டுக்கு உள்பட்ட குப்பம்பாளையம் அருந்ததியா் காலனியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசிக்கின்றனா். இப்பகுதியில் நகராட்சி சாா்பில் ரூ.26 லட்சத்தில் கழிப்பறை கட்டும் பணி தொடங்கப்பட்டது. இந்நிலையில் அங்குள்ள சிலா் கழிவறை கட்டக் கூடாது என எதிா்ப்புத் தெரிவிக்கின்றனா்.

இதனால் கட்டுமானப் பணியை தொடர முடியாத சூழல் உள்ளது. சம்மந்தப்பட்ட இடத்தில் நகராட்சி சாா்பில் கழிப்பறை கட்ட வேண்டும். அதற்கு எதிா்ப்புத் தெரிவிப்போா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என குப்பம்பாளையம் பகுதி பொதுமக்கள் ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா், நகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனா். கழிப்பறை அமைக்கவிடாமல் தடுத்தால் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என பொதுமக்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளுக்கு உணவுப் பற்றாக்குறை

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

வீடு ஒதுக்கீடு செய்யக்கோரி இலங்கைத் தமிழா்கள் மனு

ஈரோடு விஇடி கலை, அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு தின விழா

SCROLL FOR NEXT