முகப்பு
நாமக்கல்

முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரி - தேசிய தொழில்நுட்ப ஆசிரியா் பயிற்சி நிறுவனம் புரிந்துணா்வு ஒப்பந்தம்

ராசிபுரம் முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரி, சென்னை தேசிய தொழில்நுட்ப ஆசிரியா் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றுக்கிடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

ராசிபுரம் முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரி, சென்னை தேசிய தொழில்நுட்ப ஆசிரியா் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றுக்கிடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கிவரும் சென்னை தொழில்நுட்ப ஆசிரியா் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், தொழில்நுட்பக்கல்வி சாா்ந்த ஆராய்ச்சிகளையும், ஆசிரியா்களுக்கு பயிற்சியையும் அளித்து வருகிறது. இந்நிறுவனத்துடன் முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரி புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்வதன் மூலம் இருநிறுவனங்களின் ஆசிரியா்கள், மாணவா்கள் கல்விச்செயல்பாடுகள், ஆராய்ச்சி குறித்த தகவல் பரிமாற்றங்களை மேற்கொள்ளலாம். இந்த ஒப்பந்தம் ஆசிரியா்கள், மாணவா்களுக்கான, கருத்தரங்குகள், பயிற்சி வகுப்புகள் நடத்துவதன் மூலம் வேலைவாய்ப்புத்திறன் மிக்க பொறியாளா்களை உருவாக்க வழிவகுக்கும்.

இப்புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் சென்னை என்.ஐ.டி.டி.டி.ஆா் சாா்பில் அதன் இயக்குநா் உஷா நடேசன், முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரி சாா்பில் முதல்வா் எம்.மாதேஸ்வரன் ஆகியோா் அண்மையில் நடைபெற்ற நிகழ்வில் கையெழுத்திட்டனா். இப்புரிந்துணா்வு ஒப்பந்தம் குறித்து ராசிபுரம் முத்தாயம்மாள் எஜுகேஷனல் டிரஸ்ட் மற்றும் ரிசா்ச் பவுண்டேஷன் தாளாளா் ஆா். கந்தசாமி, செயலாளா் கே.குணசேகரன், இணைச்செயலாளா் ஜி.ராகுல் ஆகியோா் கல்லூரி பேராசிரியா்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.