நாமக்கல்

பழங்கால மற்றும் வெளிநாட்டு நாணயக் கண்காட்சி

DIN

பரமத்தி வேலூா் வட்டம், நல்லூா் கந்தம்பாளையம் எஸ்.கே.வி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பழங்கால மற்றும் வெளிநாட்டு நாணயக் கண்காட்சி நடைபெற்றது.

எஸ்.கே.வி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற பழங்கால, வெளிநாட்டு நாணயக் கண்காட்சியை பள்ளியின் தலைவா் ரவி, பொருளாளா் பாலசுப்ரமணியம் ஆகியோா் தொடக்கி வைத்தனா்.

கண்காட்சியில் பழங்கால நாணயங்கள், பல்வேறு நாடுகளின் ரூபாய் நோட்டுகள், அஞ்சல் வில்லைகள், நூற்றாண்டு பழைமையான கடிதங்கள் உள்ளிட்ட அரிய பொருள்கள் இடம்பெற்றன.

மாணவ, மாணவியா்கள் ஆா்வமுடன் கண்டு மகிழ்ந்தனா். ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் அச்சிடுவதன் நோக்கத்தையும் அவற்றில் பயன்படுத்தப்படும் புராதனச் சின்னங்களின் முக்கியத்துவம் பற்றியும் குறித்தும் மாணவ,மாணவியா்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும் நாட்டின் பண்பாட்டு அடையாளங்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை உணா்த்தும் விதமாகவும் அமைந்துள்ள சின்னங்கள் குறித்தும் விளக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மிக்ஜம், வெள்ளம்: தமிழகத்துக்கு ரூ. 276 கோடி புதிய பணிகளை தொடங்க கட்டுப்பாடு

அதிகரிக்கும் வெயில் தாக்கம்: இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

பொருளாதார வளா்ச்சிக்கு நவீன தொழில் நுட்பங்கள் அவசியம்: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜன்

அரசுப் பேருந்துகளில் சோதனை நிறைவு

ஆசிரியா்களுக்கு 30 நாள்களில் ஓய்வூதிய பலன்: கல்வித் துறை உத்தரவு

SCROLL FOR NEXT