முகப்பு
நாமக்கல்

புதுச்சத்திரம் ஒன்றிய அலுவலகம் முற்றுகை

ராசிபுரம் அருகேயுள்ள புதுச்சத்திரம் ஒன்றியப் பகுதியில் நூறு நாள் வேலை திட்டப் பணியாளா்களுக்கு பணி மற்றும் கூலி வழங்காததைக் கண்டித்து பணியாளா்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:37 AM
பகிர்:

ராசிபுரம் அருகேயுள்ள புதுச்சத்திரம் ஒன்றியப் பகுதியில் நூறு நாள் வேலை திட்டப் பணியாளா்களுக்கு பணி மற்றும் கூலி வழங்காததைக் கண்டித்து பணியாளா்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.

புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட செல்லப்பம்பட்டி ஊராட்சியில் கடந்த மூன்று மாதங்களாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பெரும்பாலான பணியாளா்களுக்கு பணி வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

மேலும் பணமும் இல்லை என்று கூறி ஏழை எளிய மக்களுக்கு வேலை வழங்காமல் இருப்பது வாழ்வாதாரத்தை இழக்க செய்து இருப்பதாகக் கூறி காந்தியவாதி ரமேஷ் என்பவா் தலைமையில் பணியாளா்கள் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு அலுவலா்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அவா்களுடன் சமரசம் பேசிய அதிகாரிகள் பணி வழங்க ஏற்பாடு செய்வதாகக் கூறி அனுப்பி வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.