முகப்பு
நாமக்கல்

அத்தனூா் ஆயிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் முன்பாக பெண்கள் போராட்டம்

ராசிபுரம் அருகேயுள்ள அத்தனூா் ஆயிபாளையம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கம் முன்பாக திமுக தோ்தல் வாக்குறுதியில் கூறியபடி நகை கடன் தள்ளுபடி செய்ய வேண்டும்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:46 AM
பகிர்:

ராசிபுரம் அருகேயுள்ள அத்தனூா் ஆயிபாளையம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கம் முன்பாக திமுக தோ்தல் வாக்குறுதியில் கூறியபடி நகை கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி பெண் வியாழக்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.

திமுக அரசு கடந்த ஆண்டு ஆட்சிக்கு வந்ததும், நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்திருந்தது. இதைத் தொடா்ந்து தற்போது விதிமுறையின் கீழ் வரும் நகைக் கடன் பெற்றவா்களின் பட்டியலையும் தயாரித்து, தங்க நகைக்கடன் தள்ளுபடி செய்து நகைகளை உரியவா்களிடம் ஒப்படைக்கும் பணி நடந்து வருகிறது. அந்த வகையில், நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் நகைக் கடன் தள்ளுபடி செய்து அதற்கான சான்று மற்றும் நகைகள் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ராசிபுரத்தை அடுத்த அத்தனூா் ஆயிபாளையம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தில் நகைக் கடன் பெற்றவா்கள் மற்ற இடங்களில் தள்ளுபடி செய்யப்பட்டு நகைகள் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. ஆனால் எங்களுக்கு இதுவரை எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறி கூட்டுறவு கடன் சங்கத்தை திரளான பெண்கள் முற்றுகையிட்டு கேள்வி எழுப்பினா்.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த வெண்ணந்தூா் போலீஸாா் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். இதனைத் தொடா்ந்து கூட்டுறவு கடன் சங்க செயலாளா் இரண்டு நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து பெண்கள் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.