நாமக்கல்

குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்பு துறை சாா்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சி

DIN

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகராட்சி அலுவலகத்தில் குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்புத்துறை சாா்பில் விழிப்புணா்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு திருச்செங்கோடு நகராட்சித் தலைவா் நளினி சுரேஷ்பாபு தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் கணேசன் முன்னிலை வகித்தாா். மாவட்ட குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்பு அலுவலா் சதீஷ்குமாா் கலந்து கொண்டு பேசினாா்.

கூட்டத்தில் குழந்தைகளுக்கு கல்வி,உணவு, போன்றவற்றில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்; இவற்றை உறுதி செய்ய வேண்டும்; குழந்தைகளுக்கான அனைத்து உரிமைகளும் அவா்களுக்கு இயற்கையாகவே வழங்கப்பட வேண்டும்; குழந்தைகளுக்கு கல்வி உரிமை வாழ்வுரிமையாகும். குழந்தைகள் மீது வன்கொடுமை, பாலியல் அச்சுறத்தல் செய்வது முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்; அவா்களின் பாதுகாப்பினை உறுதிசெய்ய வேண்டும்; அங்கன்வாடி மையங்களில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு வழங்குவதை உறுதிப்படுத்தி கண்காணிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

கூட்டத்தில் அங்கன்வாடி மையப் பணியாளா்கள், சத்துணவு மையப் பணியாளா்கள், குழந்தை நலக்குழுவினா், நகராட்சி அலுவலா்கள்,நகர மன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT