நாமக்கல்

விவசாயிகளுக்கு கண்டுணா்வு சுற்றுலா

DIN

வேளாண் சாா்ந்த உற்பத்தி, தொழில்நுட்பங்கள் குறித்து தெரிந்து கொள்வதற்காக திருச்செங்கோடு வட்டார விவசாயிகள் சின்ன மணலியில் உள்ள ஆரைக்கல் உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்துக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனா்.

திருச்செங்கோடு வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் லோகநாதன் தலைமையில் திருச்செங்கோடு வட்டாரத்தில் உள்ள வட்டூா், ஏமப்பள்ளி, அனிமூா், ஆண்டிபாளையம் மற்றும் சிக்க நாயக்கன்பாளையம் ஆகிய கிராமங்களில் உள்ள முன்னோடி விவசாயிகள் பெண் விவசாயிகள் மற்றும் உழவா் உற்பத்தியாளா் குழுவில் உள்ளோா் உள்பட 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் சின்ன மணலியில் உள்ள ஆரைக்கல் உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்துக்குச் சென்றனா்.

இந்த நிறுவனத்தின் இயக்குநா் தமிழ்ச்செல்வன் குழுவின் மூலம் விதை பொருள்களை வாங்கி மதிப்புக்கூட்டி உற்பத்தி செய்யப்படும் உணவு வகைகள், பதப்படுத்தி மதிப்புக் கூட்டுதல் போன்ற தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு விளக்கினா்.

சுற்றுலாவிற்கான ஏற்பாடுகளை வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை உதவி வேளாண்மை அலுவலா் சக்திவேல் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜெயலலிதா அம்மாதான் எனக்கு உத்வேகம்: ஸ்ரேயா ரெட்டி நெகிழ்ச்சி!

யெச்சூரி உரையில் ’முஸ்லிம்', 'வகுப்புவாதம்’ சொற்களை நீக்கச் சொன்ன வானொலி, தொலைக்காட்சி!

இந்த வார பலன்கள்: 12 ராசிக்கும்!

6-ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 180 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்கு!

கொடைக்கானலில் 61 வது மலர் கண்காட்சி,கோடை விழா தொடங்கியது

SCROLL FOR NEXT