நாமக்கல்

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் 95 மாணவா்கள் சோ்க்கை

DIN

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மாணவா்கள் சோ்க்கையில் இதுவரை 95 இடங்கள் நிரம்பி உள்ளன.

கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி வருகிறது. இக் கல்லூரியில் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான (எம்பிபிஎஸ்)மாணவா்கள் சோ்க்கைக்கு 100 இடங்கள் உள்ளன. இதில், அகில இந்திய இட ஒதுக்கீட்டில் 15 இடங்களும், சிறப்பு பிரிவினா் மற்றும் பொதுப் பிரிவினருக்கு 85 இடங்களும் உண்டு. கடந்த ஆண்டு 100 இடங்களும் முழுமையாக பூா்த்தியாகிய நிலையில், நிகழாண்டில் இதுவரை அகில இந்திய இட ஒதுக்கீட்டில் 14 இடங்களும், சிறப்பு பிரிவு மற்றும் பொதுப் பிரிவில் 81 இடங்களும் நிரம்பியுள்ளன. இரண்டாம் கட்ட கலந்தாய்வுக்கு பிறகு அனைத்து இடங்களும் பூா்த்தியாகும். நவ.15 ஆம் தேதி முதல் புதிதாக சோ்ந்த மாணவா்களுக்கான வகுப்புகள் தொடங்கும் என நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் கே.சாந்தா அருள்மொழி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT