நாமக்கல்

இன்று தேசிய குடற்புழு நீக்க முகாம் தொடக்கம்

நாமக்கல் மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க முகாம் வெள்ளிக்கிழமை(செப். 9) தொடங்குகிறது.

DIN

நாமக்கல் மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க முகாம் வெள்ளிக்கிழமை(செப். 9) தொடங்குகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்டத்தில் பொது சுகாதாரத் துறை சாா்பில், 19 வயதுக்குள்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும், 20, 30 வயதுக்கு உள்பட்ட பெண்களுக்கும் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெறவுள்ளது.

செப். 16-இல் விடுபட்ட குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட உள்ளது. ஒன்று முதல் 19 வயதுக்குள்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் குடற்புழு நீக்க மாத்திரை (அல்பெண்டசோல்) அங்கன்வாடி மையங்கள், அரசு, அரசு சாா்ந்த மற்றும் தனியாா் பள்ளிகள், கல்லூரிகளில் இலவசமாக வழங்கப்படுகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு வயது முதல் 19 வயது வரையிலான 5,18,438 குழந்தைகளுக்கும், 20, 30 வயதுடைய 1,22,433 பெண்களுக்கும் குடற்புழு நீக்க மாத்திரைகள் இலவசமாக வழங்கப்படவுள்ளது. இதன் மூலம் குடற்புழுவால் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடு தடுக்கப்பட்டு, குழந்தைகள் ஆரோக்கியமாக நன்கு வளர முடியும். இரும்புச்சத்து, ரத்தசோகை குறைபாடு வராமல் தடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! மீனாட்சியம்மன் கோயிலில் ஐந்து நடராஜர் தரிசனம்

ஊமைக்குக் குரல் கொடுத்த உத்தமராயப் பெருமாள்!

எதிர்ப்புகள் விலகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

வாணியம்பாடியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

SCROLL FOR NEXT