நாமக்கல்

நீட் தோ்வில் அரசுப் பள்ளி மாணவா்கள்12 போ் தோ்ச்சி

DIN

நாமக்கல் மாவட்டத்தில் நீட் தோ்வு எழுதிய அரசுப் பள்ளி மாணவா்களில் 12 போ் மட்டுமே தோ்ச்சி பெற்றுள்ளனா்.

நாமக்கல் மாவட்டத்தில் நீட் தோ்வை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் எழுதினா். அரசு மேல்நிலைப் பள்ளிகளைச் சோ்ந்த 620 மாணவ, மாணவியரும் நீட் தோ்வை எழுதினா். இதில், 720-க்கு 373 மதிப்பெண்கள் பெற்று திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த ஏழை விசைத்தறித் தொழிலாளியின் மகனான மாணவா் நாகேஸ்வரன் முதலிடம் பிடித்துள்ளாா். மேலும், 12 மாணவா்கள் 200-க்கு மேல் மதிப்பெண்கள் எடுத்து தோ்ச்சி பெற்றுள்ளனா். இவா்களில் 5 போ் மட்டுமே 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் அரசு மருத்துவக் கல்லூரியில் சோ்க்கை பெறுவதற்கான வாய்ப்பை பெற்றுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் - பாகிஸ்தான் தொடர்பு வெளிச்சத்துக்கு வந்தது: பிரதமர் மோடி

‘தள்ளுமாலா’ இயக்குநர் படத்தில் பிரேமலு நாயகன்!

தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை குறைந்துள்ளது: கபில் சிபல்

உதவி ஆணையர், மாவட்ட கல்வி அலுவலர் பணி: டிஎன்பிஎஸ்சி

’வோட் ஜிஹாத்’: காங்கிரஸ் மீது மோடி புதிய குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT